சிவகார்த்திகேயன் சர்ச்சை பேச்சு... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
சிவகார்த்திகேயன்

 தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் மகுடம் 2024 விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசினார்.   கல்வி, மருத்துவம், சமூக சேவை, விளையாட்டு, இலக்கியம், திரைத்துறை என, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற விழாவில்  அரசியல் ஆளுமைகள், நீதியரசர்கள், திரைப் பிரபலங்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

சிவகார்த்திகேயன்

இதில், மனம் கவர்ந்த நட்சத்திரம் விருது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பேசிய, சிவகார்த்திகேயன், நான் சினிமாவை விட்டு என்றைக்கோ விலகி இருப்பேன், நான் இருப்பதற்கு காரணம் என் மனைவி தான், அவர் சம்பாதித்த பணத்தில் வீடு வாங்கலாம் எனக் கூறவில்லை. படம் தயாரிக்கலாம் என்கிறார், கொட்டுக்காளி படத்தை தயாரிக்க இதுதான் காரணம். உண்மையில் அந்த படத்தை தயாரித்தது எனக்கு திருப்தியை தருகிறது.  தற்போது அமரன் படத்தில் நடித்து வருகிறேன், அந்த படம் பவர் ஃபுல் படமாக இருக்கும். ஒரு வீரனின் உன்னதமான வாழ்க்கையை பதிவு செய்ய முயற்சி செய்துள்ளோம்.

கானா

சினிமாவை நான் தான் அடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல  பல ஜாம்பவான்கள் இருக்கிறார்கள் என்றார். இந்த விருதினை சிவகார்த்திகேயனுக்கு வழங்கிய குஷ்பு, சிவகார்த்திகேயன் இந்த இடத்திற்கு வந்தததற்கு காரணம் அவரது உழைப்பு. நானும் உங்கள் ரசிகை எனக் கூறியுள்ளார். 2 நாட்களுக்கு முன்  சிவகார்த்திகேயன், கொட்டுக்காளி என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில்  "பலர் எனக்கு வாழ்க்கை கொடுத்ததாகச் சொல்லி பழகிவிட்டனர். நான் அதுபோல் இல்லை." என தெரிவித்திருந்தார். இதனைக்கேட்ட ரசிகர்கள், தனுஷ் உதவியதை மறந்துவிட்டு நன்றி இல்லாமல் சிவகார்த்திகேயன் பேசிகிறார் எனக் கடுமையாக விமர்சனம்  செய்து வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!