”சினிமாவை விட்டு எப்போதோ விலகியிருப்பேன்...” சிவகார்த்திகேயன் எமோஷனல் பேச்சு!
“நான் சினிமாவை விட்டு எப்போதோ விலகியிருப்பேன். இன்னும் விலகாமல் தொடர்ந்து சினிமாவில் நீடிப்பதற்கு என் மனைவிதான் காரணம்” என்று நடிகர் சிவகார்த்திகேயன் மகுடம் 2024 விருதுகள் வழங்கும் விழாவில் எமோஷனலாக பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

கல்வி, மருத்துவம், சமூக சேவை, விளையாட்டு, இலக்கியம், திரைத்துறை என பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் மகுடம் விருது வழங்கி கௌரவித்து வருகிறது தனியார் தொலைக்காட்சி நிறுவன. இந்த வருட விழாவில் விருது வாங்குவதற்கு கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நடிகை குஷ்பு விருது வழங்கினார்.

இந்நிலையில், விருது விழா மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், “நான் சினிமாவை விட்டு விலகாமல் இருப்பதற்கு என் மனைவி தான் காரணம். அவர், சம்பாதித்த பணத்தில் வீடு வாங்கலாம் என்று சொல்லாமல் படம் தயாரிக்கலாம் என்று கூறினார். கொட்டுக்காளி படத்தை தயாரிக்க இதுதான் காரணம். சினிமாவை நான் தான் அடுத்த இடத்திற்கு கொண்டு செல்கிறேன் என்ற சொல்ல மாட்டேன். அதற்கு பல ஜாம்பவான்கள் இருக்கிறார்கள்” என்று பேசினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
