பாலியல் வழக்கில் கைதான நாதக நிர்வாகி சிவராமன் தந்தை உயிரிழப்பு!

 
சிவராமன்

 தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில்  தனியார் பள்ளியில்   போலி என்சிசி முகாம் நடத்தி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாதக முன்னாள் நிர்வாகி  சிவராமன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.  தலைமறைவான சிவராமனை ஆகஸ்ட் 19ம் தேதி  போலீஸார் கோவையில் வைத்து கைது செய்தனர். கைதாவதற்கு முன்பே எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அத்துடன்  போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கால் உடைந்ததை அடுத்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.  மருத்துவ பரிசோதனையில்  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

சிவராமன்


இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிவராமனுக்கு  மூச்சு திணறல் அதிக அளவில் இருந்ததன் காரணமாக மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு   கொண்டு வரப்பட்டார். நேற்று முழுவதும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த  நிலையில் இன்று அதிகாலை 5:30 மணி அளவில் சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.  தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ்


தனது மகன் கைது செய்யப்பட்டதை அறிந்த சிவராமனின் தந்தை  அசோக் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.  அத்துடன் நேற்று காவேரிப்பட்டணம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அசோக் மதுபோதையில் இருந்ததாகவும் அவருக்கு  விபத்தில் தலையில் அடிபட்டு அசோக் குமார் நள்ளிரவு 11.30 மணிக்கு உயிரிழந்தார். தந்தை நள்ளிரவில் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிவராமன் காலை 5.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web