பெரும் சோகம்...29வது மாடியிலிருந்து குதித்து 'ஸ்கை டைவர்' பலி... !

 
பிரிட்டன்

பிரிட்டனில் வசித்து வருபவர்  பிரபல 'ஸ்கை டைவர்' நதி ஒடின்சன் . 33 வயதாகும் இவர்  ‘Nathy’s Sky Photography’ என்ற முகநூல் பக்கம் 10000க்கும்   மேற்பட்ட பின் தொடர்பாளர்களையும், 5000க்கும்  மேற்பட்ட லைக்குகளையும் கொண்டுள்ளது.இந்நிலையில் நதி ஒடின்சன், தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ள 29 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் மேற்பகுதியிலிருந்து பாராசூட்டுடன் கீழே டைவ் அடித்தார். அப்போது, அவர் பாராசூட்டை விரிக்க முயன்றார்.


ஆனால், எதிர்பாராதவிதமாக பாராசூட் விரியவே இல்லை. இதனால் மிக வேகமாக கீழே விழுந்த நதி ஒடின்சன் தரையில் மோதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட பாதுகாவலர்கள் செய்திக்குறிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.  அதில் “ஏதோ தரையில் விழுந்தது போன்றும் , பலத்த சப்தமும் கேட்டது. உடனடியாக அங்கு ஓடிச்சென்று பார்த்தபோது, ஒரு பெண் அழுது கொண்டிருந்தார். அப்போதுதான் நதி ஒடின்சன் கீழே விழுந்தது தெரிய வந்தது" எனத் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன்
 நதி ஒடின்சன் கீழே குதிப்பதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவர்  விசாரணை நடத்தி வருவதாக  போலீஸார் தெரிவித்துள்ளனர். நதி ஒடின்சனின் முகநூல் பக்கம், தாய்லாந்தின் பல்வேறு இடங்களிலிருந்து 'ஸ்கைடைவிங்', 'பேஸ் ஜம்பிங்' வீடியோக்களை கொண்டுள்ளது.'ஸ்கைடைவிங்'-கில் சாகசம் புரிந்து வந்த வீரர், பாராசூட் விரியாமல் படுகாயம் அடைந்து உயிரிழந்த சம்பவம்   அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web