குஷியில் இல்லத்தரசிகள்... சின்ன வெங்காயம் கிலோவே ரூ10 தான்... !

 
சின்ன வெங்காயம்

என்ன வகையான சமையலாக இருந்தாலும் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உணவின் ருசி அதிகரிக்கும் என்கின்றனர் இல்லத்தரசிகள்.  காலத்தின் கட்டாயம், விலை உயர்வு இவைகளால் சின்ன வெங்காயத்தின் விலையேற்றத்தால் தான் பலரும் சின்ன வெங்காயத்தின் பக்கம் திரும்பிவிட்டனர். இவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக  தற்போது சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  குறிப்பாக திண்டுக்கல் மொத்த வெங்காயம் மார்க்கெட்டில் வரத்து அதிகரித்து வருவதால்  சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தரத்தின் அடிப்படையில்  கிலோ ரூ. 10முதல் ரூ.25   வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெங்காயம்
 திங்கட்கிழமை இதுவரை இல்லாத அளவிற்கு 50 கிலோ எடை கொண்ட சின்ன வெங்காயம் 9,000 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கை, மாலத்தீவு, மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு தமிழகத்தில் இருந்து இன்று மட்டும் சுமார் 6000 மூட்டைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.   தற்போது ஏற்றுமதி குறைந்துள்ளதால் வெங்காயத்தின் விலை சரசரவென குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகளும்,விவசாயிகளும் பெரும்கவலை அடைந்துள்ளனர்.

சின்ன வெங்காயம்


விலை சரிவு குறித்து   திண்டுக்கல் வெங்காய மார்க்கெட் வியாபாரிகள் , "  பொங்கல் வரை தினசரி 1000 அல்லது 2000 மூட்டைகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன.   தற்போது 5,000 மூட்டைகளுக்கு மேல் வரத்து வந்து கொண்டிருக்கிறது.  இதேநிலை நீடித்தால்  வெங்காயத்தின் விலை அடிமட்டத்திற்கு போய்விடும்.  விவசாயிகள் நஷ்டம் அடைவார்கள்.  இந்த ஆண்டு சின்னவெங்காயத்தின் மகசூலும், வரத்தும் அதிகரித்துள்ளது.  இன்னும் சில நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் குறைய அதிக வாய்ப்புள்ளது" என தெரிவித்துள்ளனர்.  அதே நேரத்தில் இத்தகவலால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிலோ கணக்கில் சின்ன வெங்காயத்தை வாங்கி வீடுகளில் ஸ்டாக் வைக்க தொடங்கிவிட்டனர். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க