தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலை உயர்வு!! இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி....

 
தக்காளி சின்ன வெங்காயம்

இந்தியாவின் வட மாநிலங்களில் தொடர் கனமழை விளைச்சல் மற்றும் வரத்து குறைவு காரணமகா கடந்த சில வாரங்களாக தக்காளி விலை உச்சத்தில் இருந்தது. ஒரு கிலோ தக்காளியின் விலை  ரூ200 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. படிப்படியாக தற்போது குறையத் தொடங்கியுள்ளது .இதற்கான மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் முன்னரே வெங்காயத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   

தக்காளி சின்ன வெங்காயம்


தமிழகத்தில் கோவையில்   வெங்காயம் ஆலந்துரை, பூண்டி, சிறுவாணி, கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்தும்,   நாசிக், பூனே உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வெங்காயங்கள் விற்பனைக்காக சந்தைகளுக்கு வருகிறது. இதே போல் பெரிய வெங்காயம் மகாராஷ்டிரா  உட்பட வட மாநிலங்களில் இருந்து விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.கோவையில் கடந்த மாதம் சின்ன வெங்காயமும், பெரிய வெங்காயமும் ரூ15  முதல் ரூ20 வரை   விற்பனை செய்யப்பட்டு வந்தது.

சின்ன வெங்காயம் தக்காளி

படிப்படியாக விலை  மெல்ல மெல்ல அதிகரித்து  தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் 45 ரூபாய் முதல் ரூ50  வரை விலை விற்பனை செய்யப்படுகிறது. இவை சில்லறை விற்பனைக் கடைகளில் கிலோ ரூ80 முதல் ரூ100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  பெரிய வெங்காயத்தை பொறுத்தவரை ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ 25  முதல் ரூ35  வரை விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூர் வரத்து குறைவு மற்றும் வடமாநிலங்களில் மழை காரணமாக விலை அதிகரித்து வருவதாகவும் மேலும் சில  வாரங்கள் வரை  இந்த விலை உயர்வு நீடிக்கும் எனவும்  வியாபாரிகள் கூறியுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web