எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து புகை.. பயணிகள் அலறி அடித்து இறங்கி ஓட்டம்!!

 
ரயிலில் புகை

ஐதராபாத்தில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் திடீரென புகை வந்தது. இதனையடுத்து  வராங்கல் அடுத்த நெல்கொண்டா ரயில் நிலையம் அருகே பாதுகாப்பு கருதி ரயில் நிறுத்தப்பட்டது. ரயில் நிறுத்தப்பட்டதும்  அலறி அடித்துக் கொண்டு  பயணிகள் அனைவரும் ரயிலை விட்டு கீழே இறங்கி ஓடினர். இச்சம்பவத்தினால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

எக்ஸ்பிரஸ் ரயில்

 தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த ரயில்வே ஊழியர்கள் பழுதான ரயில் சக்கரத்தின் பகுதியில் சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். பழுது சரிசெய்யப்பட்டு ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. ரயில் சக்கர பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாக புகை வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில்
ரயில் வேகமாக  சென்று கொண்டிருக்கும் போது  அதன் சக்கரத்தில் இருக்கும் பிரேக் அழுத்தி பழுது ஏற்பட்டது.இதனால்  புகை வந்திருக்கலாம் என   முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில், 9 பேர் உயிரிழந்தனர். 8க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.அடுத்தடுத்த ரயில் விபத்துக்கள் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web