எக்ஸ்பிரஸ் ரயிலில் புகை.. அலறி அடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்!!

 
pukai

இந்தியாவில் தொலை தூரப் பயணங்களுக்கு ரயில்களையே பெரும்பாலான மக்கள் நம்பியுள்ளனர்.  ஆனால் கடந்த சில மாதங்களாக தொடர் ரயில் விபத்துகள் ரயில் பயணிகளை பெரும் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. ஜூன் மாதம் ஏற்பட்ட   ஒடிசா  ரயில் விபத்தில்   200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

train

 அடுத்ததாக மதுரையில் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   இந்நிலையில் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயில் ஆவடி அருகே உள்ள நேமிலிச்சேரி அருகே  சிக்னலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  அப்போது ஏசி பெட்டியில் இருந்து  திடீரென புகை வந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து ரயிலை விட்டுஇறங்கி ஓடத் தொடங்கினர்.  

ரயில்
ரயிலில் வெளியான புகையானது ஏசி பெட்டியில் பிரேக் பிடிக்கும் இடத்தில் இருந்து வெளியானது தெரியவந்தது. இதனையடுத்து புகையை  கட்டுப்படுத்தும் பணியில்  உடனடியாக ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். ஏசி பெட்டிக்கு செல்லக்கூடிய மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனை சரிபார்த்த பினனர்  20 நிமிடம் காலதாமதமாக  ரயில் நெமிலிச்சேரி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது. இச்சம்பவத்தால்  அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

From around the web