அதிர்ச்சி... பாம்போடு மருத்துவமனைக்கு வந்த மாணவன்!!

 
பாட்டிலில் பாம்பு

ராமநாதபுரம் மாவட்டம் செயல்பட்டு வருகிறது  களிமண் குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு இன்று பிற்பகல்  உணவு இடைவேளைக்குப் பிறகு  8ம் வகுப்பு படித்த ஒரு மாணவனை கொடிய விஷம் கொண்ட வீரியன் பாம்பு கடித்துள்ளது. வலி தாங்காமல் மாணவன் கத்தினார்.  

பாம்பு

அவனது  அருகில் இருந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாம்பை அடித்து கொன்று டப்பாவில் அடைத்தனர். அத்துடன்  அவரது பெற்றோருக்கு தகவல் அளித்தனர். பெற்றோர் வந்ததும் உடனடியாக மாணவனை அவசர ஊர்தி மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாம்பு

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மாணவனுக்கு உடல்நிலை சீராக உள்ளதாக  மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web