பகீர் வீடியோ... கல்லூரி கழிவறையில் கொத்து கொத்தாக பாம்புகள்... அலறித் துடித்த மாணவிகள்!
தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆற்காடு சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் காலை மதியம் என இரண்டு சிப்டுகளாக சுமார் 8000 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் உள்ள பெண்கள் கழிப்பறை நீண்ட நாட்களாக பயன்பாடின்றி உள்ளது. நேற்று அந்த கழிவறைக்கு சில பெண்கள் சென்றுள்ளனர்.
திருவண்ணாமலை செய்யாறு அரசு கலைக் கல்லூரி பெண்கள் கழிவறையில் பாம்புகள் நடமாட்டம்..
— கரூர் மணிகண்டன் - Say No To Drugs & DMK (@karurmaniadmk) September 4, 2024
கக்கூஸை பராமரிக்க கூட முடியல
கார் ரேஸ் விட்டு பணத்தை கரியாக்குது இந்த விடியா அரசு pic.twitter.com/SxgzlkaE7M
அங்கு சென்ற போது ஒரு கழிவறையில் சாரை சாரையாக பாம்புகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு வெளியே வந்தனர் . மற்ற சக மாணவ, மாணவர்களிடம் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே சில மாணவர்கள் பாம்பு இருந்ததை தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்டனர்.
அதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாம்புபுடி நபர்களை கொண்டு கழிவறையில் பாம்புகளை தேடத் தொடங்கினர். சில பாம்புகள் மட்டும் பிடிபட்டதாகவும் மற்ற பாம்புகளை தேடி வருவதாகவும் தீயணைப்பு வீரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அரசு கல்லூரி பெண் கழிவறையில் சாரையாக பாம்புகள் இருந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!