கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் வரிசையில் ஸ்னாப்சாட் ஊழியர்கள் பணிநீக்கம்... ... !

 
ஸ்னாப்சாட்

உலகம் முழுவதும் பெருநிறுவனங்கள் பொருளாதாரச் சரிவை சமாளிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஸ்னாப்சாட் நிறுவனம்  ஊழியர்களில் 10 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் சுமார் 500 பேர் வரை பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  விளம்பர சந்தையில் சரிவு மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு அப்பால் விரிவடைவதில்   சிரமங்கள் காரணமாக இந்தப் பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஸ்னாப்சாட்


 இந்த வேலைநீக்கம் எதிர்கால வளர்ச்சி மற்றும் முதலீடுகளை அதிகரிக்கும் திறன் இவைகளை   கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக  தெரிவித்துள்ளது.  ஸ்னாப்சாட் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வது இது முதல் முறை அல்ல. 2022 ல், இந்நிறுவனம் அதன் ஊழியர்களில் 20 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்தது.  2023லும்  குறைந்தது 3 சதவீதம் ஊழியர்களை வேலைநீக்கம் செய்தது.   ஸ்பாப்சாட்டின்  வருவாய்  கடந்த 2 காலாண்டுகளில் தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.  

ஸ்னாப்சாட்

பலதரப்பட்ட சேவைகளை வழங்கினாலும், ஸ்னாப்சாட் ஏஆர் கண்ணாடிகள், செல்ஃபி ட்ரோன், ஸ்பாட்லைட் மற்றும் ஸ்னாப்சாட் சந்தா சேவை உட்பட பல வகைகளிலும்  பின்னடைவைச் சந்தித்துள்ளது.ஸ்பாப் நிறுவனத்தின் சி.இ.ஓ இவான் ஸ்பீகல், 2024ம் ஆண்டுக்கான  இலக்குகளை நிர்ணயித்துள்ளார். தினசரி பயனர்களை   அதிகரிக்க செய்யும் வகையிலும்  விளம்பர வருவாயை 20 சதவீதம்  அதிகரிக்க செய்யவும், தற்போதைய ஸ்னாப்சாட் பிளஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கையை 70 லட்சம் இரட்டிப்பாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web