ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த மகன்.. உயிரை மாய்த்துக்கொண்ட தாய் !!

 
ஆன்லைன் சூதாட்டம்

சென்னை வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியில் கர்ணன்- செல்வி (48) தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவேந்திரன் (22)என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டதால் அவரது கணவருடன் வசித்து வருகிறார். மகன் தேவேந்திரன் கூடுவாஞ்சேரியில் செல்போன் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணி செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இளைஞர் தேவேந்திரன் தான் பணிப்புரியும் நிறுவனத்தின் பணத்தை பயன்படுத்தி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். எல்லாரும்போல் தொடக்கத்தில் சிறிய சிறிய தொகையாக சம்பாதித்த அவர், சிறிது காலத்தில் பணத்தை இழக்கத்தொடங்கினார். இதனால் விட்ட பணத்தை பெறவேண்டும் என கூடுதல் தொகை கட்டி ஆதாட்டத்தில் ஈடுபட்டு ரூ.3 லட்சத்தை இழந்துள்ளார். 

ஆன்லைன் சூதாட்டம்

இதனால் கடந்த வாரம் நிறுவனம் சார்பாக கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பணத்தை கட்டுவதாக ஒப்புகொண்டு தவணை வாங்கியுள்ளார். அதன்படி நேற்று பணத்தை திருப்பி கட்ட முடியவில்லை. இதையடுத்து தேவேந்திரன் தலைமறைவானார்.

இந்நிலையில், நிறுவன பணியாளர்கள் பணம் கேட்டு தேவேந்திரன் வீட்டுக்கு நேற்று மதியம் வந்துள்ளனர். அவர் இல்லாதால், அவரது தாயை திட்டி, மிரட்டியதாக கூறுப்படுகிறது. இதனால், மன வேதனை அடைந்த செல்வி வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தனக்குதானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

ஆன்லைன் சூதாட்டம்

அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். கதவை உடைத்து செல்வியைமீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞரின் தாயார் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web