26 வயதில் சோகம்... பிரபல ஆபாச பட நடிகை மர்ம மரணம்!

 
சோபியா லியோன்

சோபியா லியோன் பிரபலமான அடல்ட் திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடியிருப்பில் இறந்து கிடந்தார். 26 வயதான சோபியா லியோன் தற்போதைய அமெரிக்க ஆபாச நட்சத்திரங்களில் ஒருவர்.

ஆபாசப் படங்களைத் தயாரிப்பதும், நடிப்பதும் சினிமா மற்றும் தொலைக்காட்சியைப் போலவே பல நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாகிவிட்டது. திரைப்பட வாய்ப்பு புறக்கணிக்கப்படுவது, பொய்யான வாக்குறுதிகள் மற்றும் தனிப்பட்ட நெருக்கடிகள் காரணமாக அதன் ஆர்வலர்களில் பெரும்பாலோர் இந்த துறையில் நுழைகிறார்கள்.

மற்ற திரை நட்சத்திரங்களைப் போலவே அவர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும். ஆனால் இளமை முடிந்ததும் ஆபாச உலகம் அவர்களை வீழ்த்திவிடும். இது தவிர ஆபாசப் படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு, போதைப்பொருளை உட்கொண்டு, கடைசியில் அதற்கு அடிமையாகிவிடுகிறார்கள்.

சமீப காலமாக தொழில்துறையின் பல நட்சத்திரங்கள் இளம் வயதிலேயே அகால மரணமடைந்ததற்கு இந்த போதைப் பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முன்னதாக, கடந்த 2 மாதங்களில், காக்னி லின் கார்ட்டர், ஜெஸ்ஸி ஜேன் மற்றும் டைனா ஃபீல்ட்ஸ் ஆகிய 3 ஆபாச உலகின் பிரபலங்கள் அகால மரணம் அடைந்துள்ளனர். சோபியாவின் மரணம் இந்த தொடரில் நான்காவது மரணம்.

18 வயதில் வயது அட்ல்ட் திரைப்பட துறையில் நுழைந்த சோபியா லியோன், 1997 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மியாமியில் பிறந்தார். மாடலிங் மற்றும் திரைப்படத் துறை வாய்ப்புகள் அவரைத் தவறவிட்ட பிறகு, அவர் ஆபாச திரைப்பட உலகிற்கு திரும்பினார். அங்கு, ரசிகர்கள் அவரை ரசித்தனர், விரைவில் அவர் ஒரு சிறந்த நட்சத்திரமானார்.அவரை புறக்கணித்த மாடலிங் உலகம் அதன் பின்னர் சோபியாவை கண்டுகொண்டது. இதர ஆபாச பட நட்சத்திரங்களைப் போலவே, அந்த துறைக்கு தலைமுழுகி, தான் விரும்பிய மாடலிங் துறையில் தடம் பதிக்க காத்திருந்தார். ஆனால் அதற்கு வாய்ப்பின்றி அவரது மர்ம மரணம் நிகழ்ந்திருக்கிறது என்பது நிதர்சணமான உண்மை.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web