கதறியழுத தென்னாப்பிரிக்க கேப்டன்... ஓவர் பேச்சால் பயங்கர அப்செட்!

 
தென் ஆப்பிரிக்கா
 

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது. இதன் மூலம், உலகக் கோப்பையை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்திய பெண்கள் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு பின் உலகக்கோப்பையை வென்ற நான்காவது நாடாக இந்தியா இணைந்துள்ளது. இந்த பெரும் வெற்றிக்கு பின், தென்னாப்பிரிக்க வீராங்கனைகளின் முகத்தில் ஏமாற்ற கண்ணீரே ஓடியது.

இறுதிப்போட்டிக்கு முன்பு, தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன்  லாரா வூல்ஃபார்ட் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்திய ரசிகர்களை நாங்கள் அமைதியாக்குவோம்” என்று தைரியமாக கூறினார். இது கடந்த ஆண்டு ஆண்கள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறிய அதேபோன்ற வார்த்தையை நினைவூட்டியது. ஆனால் லாராவுக்குச் சொன்ன அந்த வார்த்தையே தற்போது “ஆப்பாகி” விட்டது.

இறுதிப் போட்டியில் கடைசியாக விக்கெட்டை இழந்ததும், லாரா தன்னுடைய முகத்தை மூடி கதறி அழுதார். அவருடன் பல வீராங்கனைகளும் உணர்ச்சி வசப்பட்டு அழுகையை அடக்க முடியவில்லை. அணியின் பயிற்சி குழுவினர் அவர்களை ஆறுதல் கூறிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ரசிகர்கள் இதனைப் பார்த்து, “இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம் என்றார், ஆனால் கடைசியில் முகத்தைக் கூட காட்ட முடியாத நிலை ஏற்பட்டது!” என நகைச்சுவையுடன் பதிவிட்டுள்ளனர்.இந்திய பெண்கள் அணி சாதனை படைத்துள்ள இந்த வெற்றி, நாட்டின் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத பொன்னான தருணமாக திகழ்கிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!