தென்மேற்கு பருவமழை துவங்கியது... அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

 
கன மழை

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்து வரும் 4 நாட்களுக்கு பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த செய்தி மனசைக் குளிர்விக்கும் செய்தியாகவே உள்ளது. கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், இது தென்தமிழக பகுதிகளிலும் இனி வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை பரவ உள்ளது.கடந்த சில நாட்களாகவே தேனி போன்ற தமிழக மாவட்டங்களிலும்  மழை பெய்து வருகிறது.

மத்திய கிழக்கு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய பிப்பர்ஜாய் புயல், மிக தீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மும்பையில் இருந்து தென்மேற்கே சுமார் 900 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று, வடக்கு - வடமேற்கு திசையில் அடுத்த இரண்டு தினங்களில் நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வெப்ப சலனம் காரணமாக, இன்று (ஜூன் 8) மற்றும் நாளை (ஜூன் 9) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

நாளை ஜூன் 10ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரி இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web