தென்மேற்கு பருவமழை வலுவிழந்தது!! இயல்பை விட 9% மழை குறைவு!!

 
மழை

இந்தியாவில் தென் மேற்கு பருவமழை காரணமாக வடமாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. தென்பகுதிகளில் வழக்கத்தை காட்டிலும் குறைவான அளவே மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்   தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 9 சதவீதத்திற்கும் குறைவான மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக  வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பாலச்சந்திரன்


 தமிழகத்தை பொறுத்தவரை விவசாயம் மற்றும் குடிநீருக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திராவை நம்பியே இருந்து வருகிறோம். தமிழகத்தில் தாமிரபரணியை தவிர பெரிய ஆறுகள் எதுவும் இல்லை. தாமிரபரணி மட்டுமே தமிழகத்தில் உற்பத்தியாகி மாநிலத்திற்குள்ளேயே முடிகிறது. தாமிரபரணி தண்ணீர் திருநெல்வேலி மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருக்கும் கிராமங்களின் தண்ணீர் தேவைக்கு சரியாக உள்ளது.    கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடப்பு சீசனில் குறைவான மழையே பதிவாகி இருக்கிறது.

வெயில் மழை

கேரளாவில் 47% பருவமழை பற்றாக்குறையும், தமிழகத்தில் இயல்பை விட 9% மழை குறைவாக பெய்துள்ளதாகவும்   பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். பூமியில் நேரடியாக சூரிய கதிர்கள் விழுவதால் வெப்பம் இயல்பை விட அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென் மேற்கு பருவமழை வலுவிழந்து இயல்பை விட குறைவாக மழை பதிவாகியுள்ளது எனக்  குறிப்பிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web