2700 சிறப்பு பேருந்துகள்... களைகட்ட தயாராகும் திருவண்ணாமலை தீபத்திருவிழா...!!

 
பேருந்துகள்


திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திரு கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 25லட்சம் மக்கள் தீபத்திருவிழாவிற்கு வருகை தந்தனர். நடப்பாண்டில் 40 லட்சம் பக்தர்கள் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைஅடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான  முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

அரசு பேருந்துகள்


ஆய்வுக் கூட்டத்தின்  முடிவில்  “திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பல்வேறு கோட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 2700 சிறப்பு பேருந்துகள்  இயக்கப்பட உள்ளதாக தெரிவிகக்ப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் 6832 நடைகளாக இயக்கப்படும் எனவும்,  வெளி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு கொண்டு வந்து ஆட்டோக்களை இயக்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  தெரிவித்துள்ளார். மேலும் ஆட்டோக்கள் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இயக்கப்பட்டால்  உடனடியாக அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .  

சிறப்பு பேருந்துகள்


மேலும் ஆட்டோக்களுக்கு ஒரு நபர் ஒருவருக்கு குறைந்தபட்சம் 30 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரை  மட்டுமே கட்டணம்  வசூலிக்கப்பட வேண்டும்.  கூடுதலாக கட்டணம் வசூலிப்பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  அத்துடன் பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதற்கு தேவையான  அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 9 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து தனியார் பேருந்துகள் இலவசமாகவும், மினி பேருந்துகளில் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கோவில் வரை ஒருவருக்கு ரூ10  நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும்  கிரிவலப் பாதையில் எந்த வாகனங்களையும் இயக்குவதற்கு அனுமதி இல்லை. சரக்குகள் ஏற்றும் வாகனங்களில் ஆட்களை ஏற்றக்கூடாது எனவும் மீறினால் கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web