தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 9 வரை சிறப்பு பேருந்துகள்!!

 
வேளாங்கண்ணி

வேளாங்கண்ணி மாதா தேவாலய ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 28 முதல் 9ம் தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து சிறப்பு  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்   வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழாவை முன்னிட்டு   சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதாகோவில், ஒரியூர், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர் காரைக்கால் ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி
அதே போல் வேளாங்கண்ணி வரும் பக்தர்கள்   திரும்ப செல்ல வேளாங்கண்ணியிலிருந்தும் வரும் 28ம் தேதி முதல் 9ம் தேதி வரை இரவு/பகல்  24 மணி நேரமும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இந்த திருவிழாவை காண 10 லட்சம் வரை பக்தர்கள் வருகை தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேற்படி அனைத்து ஊர்களின் பேருந்து நிலையங்களிலும், வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலும் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்படும் எனவும் அதற்கான ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன. 

வேளாங்கண்ணி மாதா திருவிழா


இச்சேவை மையங்களில் சிறப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே இச்சிறப்பு பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள  வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் தேர்விழா  ஆகஸ்ட்  29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. ஆரோக்கிய மாதாவின் தேர்பவனி  செப்டம்பர்  7ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   வேளாங்கண்ணி மாதா தேவாலய ஆண்டு திருவிழா நாட்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை மக்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கபடுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web