நாளை முதல் சிறப்பு பேருந்துகள்... தொடர் விடுமுறை எதிரொலி... !

 
அரசு பேருந்து

நாளை மறுநாள் தைப்பூச திருவிழா உலகம் முழுவதும் முருகன் ஆலயங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தைப்பூசம் ஜனவரி 25ம் தேதி விடுமுறை, ஜனவரி 26 குடியரசு தினம் விடுமுறை ஜனவரி 27ம் தேதி  4 வது சனிக்கிழமை விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என தொடர் விடுமுறைகள் வரிசைகட்டி நிற்கின்றன. இதனையடுத்து சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதே நேரத்தில்  கும்பகோணம் கோட்டம் சார்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்து

 அதன்படி தைப்பூசம், மற்றும் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பழனி, திருவண்ணாமலைக்கு  நாளை  ஜனவரி 24 முதல்  ஜனவரி 28 வரை தொடர்ந்து  5 நாட்கள் கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயஙகொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழிதிருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜனவரி 25 மற்றும் 26ம் தேதிகளில்  தேவைக்கு ஏற்ப  பொதுமக்கள் பயணம் செய்ய கூடுதலாக சிறப்பு பேருந்துகள் உட்பட தினமும்   சுமார் 300 பேருந்துகள் சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை,திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு பேருந்து
இதே போல் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர்ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் முடிந்து பயணிகள் அவரவர் ஊர்களுக்கு திரும்பி செல்ல 28 மற்றும் 29   தேதிகளில் சிறப்பு பேருந்துகள் திருச்சியிலிருந்து  சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும்.  மேலும் பெரம்பலூர், ஜெயகொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் , திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம் , தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை  ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9.30 மணியிலும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  
 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web