செப்டம்பர் 25 வரை நீட்டிப்பு.. பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் !!

 
பெயர் மாற்றம்

தமிழகம் முழுவதும் ஜூலை  24 முதல் வீட்டு மின் இணைப்பு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி  உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.  தற்போது மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான சிறப்பு முகாம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 25ம் தேதி வரை  பெயர் மாற்றத்திற்கான சிறப்பு முகாம் நீட்டிக்கப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

பெயர் மாற்றம்

வீட்டு மற்றும் பொது மின் இணைப்பு சிறப்பு பெயர் மாற்றம் முகாம் செப்டம்பர் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய ஏதுவாக   ஜூலை 24ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.  தமிழகம் முழுவதும் கடந்த 20 நாட்களில் 2 லட்சம் பேர் பெயர் மாற்றம் TANGEDCOவில் செய்யப்பட்டு வருகின்றன.   TANGEDCO-வில் பெயர் மாற்றம் செய்ய கடைசி தேதி ஆகஸ்ட் 24 என அறிவிக்கப்பட்ட நிலையில் முகாமை செப்டம்பர் 25 வரை நீட்டித்துள்ளனர்.

மின்சாரம் eb
தமிழ்நாடு முழுவதும் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புதாரர்களுக்கான ‘சிறப்பு பெயர் மாற்றம் முகாம்’  ஜூலை 24ம் தேதி முதல் ஒரு மாதகாலம் வரை   மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம்  விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம்.  நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைச் செலுத்தி பெயர்மாற்றம் செய்துகொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது. 
இந்த சிறப்பு பெயர் மாற்றம் முகாம்கள், ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை தினங்கள் தவிர அனைத்து அலுவலுக வேலை நாட்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 வரை செயல்படும். வீட்டு மின் இணைப்புகள் மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யலாம். இதற்காக  நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமான ரூ 726 ஐ  செலுத்தலாம்.   தேவையான ஆவணங்களுடன் பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ   விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web