நாளை முதல் சிறப்பு தரிசனம் ரத்து.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி !!

 
திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!

108திவ்ய தேச ஸ்தலங்களில் ஒன்றும், உலகபிரசித்தி பெற்றதுமான ஆலயம் திருமலை திருப்பதி தேவஸ்தானம். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர். இங்கு அக்டோபர் 15  முதல் 23 வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழாவையொட்டி நாளை அங்குரார்ப்பனமும் நாளை மறுநாள் கொடியேற்ற பிரமோற்சவ விழாவும் தொடங்குகின்றன.

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!


இதனை முன்னிட்டு  நாளை முதல் அதிக அளவு சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பக்தர்களுக்கான  சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  

திருப்பதி திருமலை பெருமாள்

இதனால் இலவச தரிசனத்திற்கு நேரம் குறையும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  அதே நேரத்தில்  பிரமோற்சவ விழாவை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள்  இயக்கப்பட உள்ளன. மேலும்,  ஜனவரி மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் அக்டோபர்  24ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web