இன்று புதிய நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர்!!

இன்று நாடாளுமன்றசிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.இதில் வரலாற்று சிறப்பு மிக்க பல முடிவுகள் எடுக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இன்றைய கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த வளாகம் "பிளாட்டினம்-மதிப்பீடு செய்யப்பட்ட பசுமைக் கட்டிடம்" என அங்கீகாரம் பெற்றுள்ளது
புதிய நாடாளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் 4 மாடிகளை கொண்டு 971 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற வளாகத்தின் திறப்பு விழா கடந்த மே 28ம் தேதி நடைபெற்றது.
புதிய கட்டடத்தின் கட்டுமான பணிகள் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் நடைபெற்றது. இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் பழைய கட்டடத்தை விட விஸ்தாரமான அறைகள் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய பறவையான மயிலை அடிப்படையாகக் கொண்டு, புதிய மக்களவை கட்டடம் 888 இருக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.அத்துடன் பாஜகவின் சின்னம் மற்றும் தேசிய மலரான தாமரை கருப்பொருளை அடிப்படையாக கொண்டு மாநிலங்களவை 348 இடங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2 அவைகளின் கூட்டுக்கூட்டத்தை நடத்தும் வகையில் 1,272 இருக்கைகளுடன் அரங்கம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தின் ஆயுட்காலம் 150 ஆண்டுகள்.
இங்கு சபாநாயகர் இருக்கை அருகே திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட செங்கோல் வைக்கப்பட்டுள்ளது.மக்களவை, மாநிலங்களவையை தவிர புதிய நாடாளுமன்ற வளாகத்தின் மையத்தில் 'அரசியலமைப்பு மண்டபம்' என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் வெளிப்புறத்தில் மற்ற நிர்வாக அலுவலகங்கள் இயங்கிக் கொண்டுள்ளன. புதிய வளாகத்தில், அலுவலகங்கள் 'அதி-நவீன' பாணியில் சமீபத்திய தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் மற்றும் மிகவும் பாதுகாப்பானவையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட நூலகத்தை புதிய நாடாளுமன்றம் கொண்டுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத்தின் திறந்த முற்றத்தில் தேசிய மரமான ஆலமரமும் உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...