நாளை சென்னை , கோவைக்கு சிறப்பு ரயில்கள் ... தெற்கு ரயில்வே அதிரடி... !

 
ரயில்கள்

தமிழகத்தில் தைப்பூசம்,  குடியரசு தினம், 4 வது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என  4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனையடுத்து சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர் சென்றிருந்தனர். இவர்கள் மீண்டும் பணியிடங்களுக்கு திரும்ப  சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே  தெரிவித்துள்ளது.   சென்னையில் வசித்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படை எடுத்த நிலையில்  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திணறியது.  

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..

தற்போது  வெளியூர்  சென்ற மக்கள் சிரமமின்றி எளிதாக சென்னைக்கு திரும்ப நாளை கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதன்படி  கோவை சிறப்பு ரயில் இரவு 11.30 மணிக்கும், குமரி சிறப்பு ரயில் இரவு 8.30 மணிக்கும் அந்தந்த ஊர்களில் இருந்து புறப்படும்.  இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஞாயிற்றுக்கிழமை கோவையிலிருந்து இரவு 11.30க்கு புறப்படும் இந்த ரயில்  ஜனவரி 29ம் தேதி நள்ளிரவு 12:10 க்கு திருப்பூரைச் சென்றடைகிறது.  

ரயில் முன்பதிவு

நள்ளிரவு 1 மணிக்கு ஈரோடு,  2 மணிக்கு சேலம், 3: 55 மணிக்கு ஜோலார்பேட்டை, காலை 5 மணிக்கு காட்பாடி, 6:43 க்கு அரக்கோணம், 7:38 மணிக்கு பெரம்பூர் மற்றும் காலை 8:30க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.  ஜனவரி 29ம் தேதி பிற்பகல்  1:45க்கு சென்னையில் இருந்து மீண்டும் புறப்பட்டு பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இரவு 11: 05 மணிக்கு கோவையை வந்தடைகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  அதேபோல குமரியில் இருந்து சென்னைக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை இரவு 8.30க்கு   புறப்பட்டு  மறுநாள்  காலை சென்னை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web