சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள்... ஐயப்ப பக்தர்களே முன்பதிவு செய்துட்டீங்களா?

சபரிமலை உலக புகழ்பெற்ற ஐயப்பன் கோவில். ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனை தரிசனம் செய்ய கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருகின்றனர். அதிலும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிகமிக அதிகம். அந்த வகையில் நடப்பாண்டில் கார்த்திகை மாதம் நேற்று முன் தினம் பிறந்த நிலையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். 41 நாட்கள் பூஜைகள் நடைபெற்று டிசம்பர் 27ம் தேதி ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெற உள்ளது.
இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலை செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. பேருந்து, ரயில், வேன் மூலம் பக்தர்கள் சபரிமலைக்கு பயணிப்பர். பக்தர்களின் வசதிக்காக சபரிமலைக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோட்டையம் வரையும் கோட்டயத்தில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது. . அதன்படி (ரயில் எண் 06027) நவம்பர் மாதம் 19 மற்றும் 26 தேதிகளிலும் டிசம்பர் மாதத்தில் 3,10, 17, 24, 31 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதே போல கோட்டயத்தில் இருந்து (ரயில் எண் 06028) நவம்பர் மாதத்தில் 20, 27 தேதிகளிலும் டிசம்பர் மாதத்தில் 4, 11, 18, 25 தேதிகளிலும் ஜனவரி 1ம் தேதியும் சிறப்பு ரயிலானது சென்னைக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலில் 12 ஏசி பெட்டிகளும், 6 இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளும், 2 முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு பெரம்பலூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டையம் சென்று சேர்கிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!