சென்னையிலிருந்து திருச்சி, செங்கோட்டை வழியாக சிறப்பு ரயில் இயக்கம்!

 
ரயில்

தமிழகத்தில் சென்னை தாம்பரம் - கொச்சுவேலி இடையே திருச்சி, விருதுநகர், செங்கோட்டை, கொல்லம் வழியாக வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தாம்பரத்தில் இருந்து வருகிற செப்டம்பர் 6ம் தேதி, 8ம் தேதி, 13ம் தேதி, 15ம் தேதி, 20ம் தேதி, 22ம் தேதி ஆகிய நாட்களில் (வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06035) திருச்சிக்கு நள்ளிரவு 12.20 மணிக்கு வந்து 12.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 11 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும்.

ரயில்

அது போல் மறுமார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து வருகிற செப்டம்பர் 7ம் தேதி, 9ம் தேதி, 14ம் தேதி, 16ம் தேதி, 21ம் தேதி, 23ம் தேதி ஆகிய நாட்களில் (சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை) மாலை 3.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06036) திருச்சிக்கு நள்ளிரவு 1.45 மணிக்கு வந்து 1.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.35 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

ரயில் முன்பதிவு

திருச்சி, விருதுநகர், செங்கோட்டை, கொல்லம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 14 மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பெட்டிகள் மற்றும் 2 முன்பதிவு இல்லாத பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில் வாரம் இருமுறை இயக்கப்பட உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web