வாவ்.... அயோத்திக்கு தமிழகத்தில் இருந்து சிறப்பு ரயில்கள்... !

 
அயோத்தி

அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் திறப்பை ஒட்டி  நகரம் முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கையாக உத்தரபிரதேச காவல்துறை, 10,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளது.  கோவிலுக்கு வரும் பக்தர்களின்  பாதுகாப்பை உறுதிசெய்ய ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் மற்றும் ராமர் சிலை நிறுவப்படும் நாளான ஜனவரி 22ம் தேதி   பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்லது. அடுத்தநாளான  ஜனவரி 23  முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

அயோத்தி

இதனால், பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் அயோத்தி கோயிலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.  இதன் அடிப்படையில் பக்தர்களின் தேவை மற்றும் வசதிக்காக இந்தியாவின்  பல்வேறு நகரங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் இயக்க உள்ளது.அதன்படி இந்தசிறப்பு ரயில்கள்  ஜனவரி 22ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி

டெல்லி, மும்பை, நாக்பூர், புனே, வார்தா, கோவா, கோட்டயம், டேராடூன், ஹைதராபாத், செகந்திராபாத், ஜம்மு காஷ்மீர், கத்ரா, உத்னா, இந்தூர், பலன்பூர், சலர்பூர், போபால், ஜபல்பூர், அசாம், குவஹாத்தி, நாசி, ஜால்சனா   பகுதிகளில் இருந்து  இயக்கப்பட உள்ளது.தமிழகத்தை  பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், ஈரோடு, நெல்லை, கன்னியாகுமரி, திருப்பூர்  ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது . ஜனவரி 22ஆம் தேதி முதல் ஐஆர்சிடிசி இணையத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web