இன்று திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்... சூரசம்ஹாரத்தை காண குவியும் பக்தர்கள்...!!

 
ரயில்

கந்த சஷ்டி திருவிழா முருகன் ஆலயங்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2ம் படை வீடான  திருச்செந்தூரிலும் கந்த சஷ்டி உற்சவம் நடைபெற்று வருகிறது. நாளை நடைபெற உள்ள  சூரசம்ஹாரத்தை  காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிவது வழக்கமாக இருந்து வருகிறது.

ரயில்

இதற்காக  சென்னையிலிருந்து இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.   திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி  நவம்பர் 13ம் தேதி  யாக சாலை பூஜையுடன் தொடங்கியுள்ளது. கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெறவுள்ளது.

திருச்செந்தூர்
இந்நிலையில், திருச்செந்தூர் கந்தஷ்டி திருவிழாவை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை   சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.  நாளை சூரசம்ஹாரம் நடக்கும் நிலையில், இன்று இரவு 11.55 மணிக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.  மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து தாம்பரத்திற்கு நாளை இரவு 10.10 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சிறப்பு ரயில் புறப்படும் எனவு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web