தைப்பூச திருவிழா நாட்களில் பழநிக்கு சிறப்பு ரயில்கள்?!..!!

 
ரயில்

திண்டுக்கல் மாவட்டம், பழநியில்  தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களில் தைப்பூசமும் ஒன்று.  இந்த விழா   ஜனவரி 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.  10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.  

ரயில்

இவர்களில் பெரும்பாலானோர் பாத யாத்திரையாக வருவதால், ஊர் திரும்புவதற்கு பேருந்துகளில்  அதிகமாக செல்கின்றனர். இந்நிலையில், பழநி வழித்தடத்தில் போதிய ரயில்கள் இல்லாததால், பக்தர்கள் அனைவரும் பேருந்துகளை  பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பழநியில் இருந்து பிற ஊர்களுக்கு போதிய ரயில்கள் இயக்கப்படுவதில்லை. பழநி வரை இயக்கப்பட்டு வந்த சில ரயில்களும் பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டு விட்டது. எனவே, திருவிழா காலங்களில் மட்டுமாவது பழநி வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பக்தர்கள் உட்பட  பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில் முன்பதிவு
இது குறித்து பழநியில் வசித்து வரும்  சங்க நிர்வாகி முருகானந்தம் விடுத்த செய்திக்குறிப்பில்  ”பழநியில் இருந்து திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.   இதேபோல, பழநியில் இருந்து திண்டுக்கல், சேலம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த 2 ரயில்களுமே தற்போது பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ரயில்களால் கேரள மக்கள் மட்டுமே பயன்பெறும் சூழல் நிலவி வருகிறது. தைப்பூச திருவிழாவிற்கு கோவை, மதுரை, காரைக்குடி, திருச்சி, சென்னை உட்பட   ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழநிக்கு வருகை தருவர். எனவே, அவர்களின் வசதிக்காக திருவிழா நடைபெறும் நாட்களில் மட்டுமாவது சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளனர்.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web