நாளை முன்பதிவு துவக்கம்... தீபாவளிக்கு நெல்லை வரை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தென் ரயில்வே அதிகாரிகள் சென்ட்ரல் – மங்களூரு, எழும்பூர் – திருவனந்தபுரம், திருநெல்வேலி – செங்கல்பட்டு இடையே சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
திருநெல்வேலி – செங்கல்பட்டு சிறப்பு ரயில்
திருநெல்வேலி புறப்பாடு: அக்.21, 22 – அதிகாலை 4 மணிக்கு (ரயில் எண்: 06156)
செங்கல்பட்டு வருகை: பிற்பகல் 1.15 மணிக்கு
மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து அக்.21, 22 – பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும் (ரயில் எண்: 06155)
கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர் வழிகாக செங்கல்பட்டு வந்தடைகிறது.
சென்னைக்கு சிறப்பு ரயில்கள்:

போத்தனூர் – சென்ட்ரல்: அக்.19 – இரவு 11.20 புறப்பு, மறுநாள் காலை 8.45 வருகை (ரயில் எண்: 06044)
சென்ட்ரல் – மங்களூரு: அக்.20 – பிற்பகல் 12.15 புறப்பட்டு மறுநாள் காலை 8.00 வருகை (ரயில் எண்: 06001)
மங்களூரு – சென்ட்ரல்: அக்.21 – மாலை 4.35 புறப்பு, மறுநாள் காலை 10.15 வருகை (ரயில் எண்: 06002)
சென்ட்ரல் – போத்தனூர்: அக்.22 – பிற்பகல் 12.15 புறப்பு, மறுநாள் இரவு 10.00 வருகை (ரயில் எண்: 06043)
முக்கிய வழிகள்: அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு

திருவனந்தபுரம் – எழும்பூர் ரயில்
திருவனந்தபுரத்தில் இருந்து அக்.21 – மாலை 5.10, மறுநாள் காலை 11.00 வருகை (ரயில் எண்: 06108)
மறுமறை ரயில்: எழும்பூரிலிருந்து அக்.22 – பிற்பகல் 1.25 புறப்பாடு, மறுநாள் காலை 8.00 வருகை (ரயில் எண்: 06107)
முக்கிய வழிகள்: பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு
முன்பதிவு தகவல்
இந்த ரயில்களுக்கு முன்பதிவுகள் நாளை அக்.12ம் தேதி காலை 8 மணி முதல் தொடங்கவுள்ளதாக தென் ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
