தீபாவளி ஸ்பெஷல் ... கூடுதல் சிறப்பு ரயில்கள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் அதிகரிப்பை சமாளிக்க தெற்கு ரெயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதில் சென்னை சென்ட்ரலிலிருந்து போத்தனூர் நோக்கி அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரவு 11.35 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 9.30 மணிக்கு போத்தனூரை சென்றடையும்.

மறுமார்க்கமாக போத்தனூரில் இருந்து அக்டோபர் 18 அன்று மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 11.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மேலும் அக்டோபர் 21 அன்று போத்தனூரிலிருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை சென்னை வந்தடையும்.

அதேபோல் தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரி நோக்கி அக்டோபர் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். இது மறுநாள் பிற்பகல் 1.25 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும். கன்னியாகுமரியில் இருந்து அக்டோபர் 17 அன்று மதியம் 3.35 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.30 மணிக்கு செங்கல்பட்டுவந்தடையும்.இந்த தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு இன்று (அக்டோபர் 15) மதியம் 2.15 மணிமுதல் தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
