பயன்படுத்திக்கோங்க மக்களே... 6421 முகாம்களில் டிசம்பர் 30 வரை சிறப்பு தடுப்பூசி முகாம்...!!

 
தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. ஒருவாரம் தொடர் விடுமுறை பள்ளி கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில்  மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாம்

சிறப்பு தடுப்பூசி முகாம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்   சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அங்கன்வாடி மையங்கள் , ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்களில்  இன்று  டிசம்பர் 13ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை நடைபெறும். மிக்ஜாம் புயல் பாதிக்கபட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 9 மாதம் தொடங்கி 15 வயது வரையான குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகள் போடப்படும்.  அத்துடன் நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் குறிப்பிட்ட 4  மாவட்டங்களிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்! பயன்படுத்திக்கோங்க மக்களே….!

அந்த வகையில்  4  மாவட்டங்களுக்கும்  160 வாகனங்கள்  மற்றும்   6,421 முகாம்கள் மூலம் இந்த தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அத்துடன் இதுவரை இத்திட்டத்தால்  4 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  தமிழகம் முழுவதும் அக்டோபர் முதல் இதுவரை ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்டுள்ள 7 வார முகாம்களில் 7 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.  மேலும்   3 வாரங்களுக்கு இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் ” எனத் தெரிவித்துள்ளார்.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web