உஷார் மக்களே... வேகமெடுக்கும் நிஃபா வைரஸ் பரவல்... என்னென்ன அறிகுறிகள்?
இந்தியாவில் கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் வசித்து வரும் 24 வயது இளைஞர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடன் தொடர்பில் இருந்த 151 பேர் மருத்துவச் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். அவர்களில் 5 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் உள்ளது. இதனையடுத்து தமிழகம் உட்பட அக்கம் பக்கத்து மாநிலங்களில் அந்தபாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் நிஃபா வைரஸ் பரவலைத் தடுக்க கேரள எல்லையோர மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் மருத்துவக்கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் சுகாதாரக் குழுக்களை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்லையோர மாவட்டங்களில் கண்டறியப்படும் காய்ச்சல் குறித்த முழு தகவலையும் சுகாதாரத் துறைக்கு அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, காய்ச்சல் அறிகுறி இல்லை என்பதை உறுதி செய்த பிறகுதான் தமிழகத்துக்குள் அனுமதிக்க வேண்டும். தொற்று பாதிப்பு இருந்தால், அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், மனநிலை மாற்றம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்தால் வைரஸ் பரவல் தொற்றுகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!