தமிழக மீனவர்கள் 11 பேர் கைது.. இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்!
தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று மீண்டும் நாகை மீனவர்கள் 11 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை பருத்தித்துறை வடகிழக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 11 பேரை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து கைது செய்து, படகையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களையும் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக மீனவர்களை அடிக்கடி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கைக் கடற்படையினர் கைது செய்து வரும் போக்குக்கு இராமேஸ்வரம் உட்பட தமிழக மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தும், மத்திய மாநில அரசுகள் இது குறித்து எந்தவொரு தீர்வையும் ஏற்படுத்தாமல் இருந்து வரும் போக்கு மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய - இலங்கை அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!