என்றும் உங்களுடன்... ஸ்ருதி சண்முகப் பிரியா கணவர் நினைவில்.... நெகிழ்ச்சி வீடியோ!!

 
ஸ்ருதி சண்முகப் பிரியா

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நாதஸ்வரம் சீரியல் மூலம் அறிமுகமாகி   தமிழ் ரசிகர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரானவர் நடிகை ஸ்ருதி சண்முகப் பிரியா.  இவர் கடந்த ஆண்டு மே மாதம் அரவிந்த் சேகரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு  திருமணம் ஆகி  ஒரு வருடத்திற்குள்ளாகவே  ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.

 இச்சம்பவம் உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்ள்   மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், கணவரின் பிரிவை மறக்க ஸ்ருதி சண்முகப்பிரியா காட்டுக்குள் பயணம் செய்து வருகிறார்.   திருமணத்திற்கு பின் நடிப்பதையே நிறுத்தி விட்டார்.  ஸ்ருதி, தனது கணவருடன் அதிக இடங்களுக்கு சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தார். சுற்றுலா சென்ற  புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

ஸ்ருதி ஷண்முகப்பிரியா

இந்நிலையில் அரவிந்த் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த   சோகத்தில் இருந்து வெளியே வந்து  காட்டுக்குள் பயணம் சென்றுள்ளார் ஸ்ருதி. சமீபத்தில் ஸ்ருதி காட்டுக்குள் சென்றுள்ள வீடியோ, புகைப்படங்களை  தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த  ரசிகர்கள் ஸ்ருதி சண்முகப் பிரியாவிற்கு அவருக்கு மீண்டு வாருங்கள் என ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை