புறா எச்சங்களுடன் இருக்கைகள்... உலகக்கோப்பைக்கு தயாராகாத மைதானங்கள்... வைரல் வீடியோ!!

 
இருக்கைகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை அக்டோபர் 5ம் தேதி இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. இதில் போட்டி நடைபெற உள்ள  மைதானங்கள் இன்னும் முழுமையாக தயாராக இல்லை என்ற   புகார்கள் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக  உலகம் முழுவதிலும் இருந்து முன்னணி அணிகள் கலந்து கொள்கின்றன.    இந்தப் போட்டிகளுக்காக  ஓராண்டிற்கும் மேலாக மைதானங்களை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.


 

 ஐபிஎல் தொடரில்  ஹைதராபாத்  உப்பால் மைதானத்தில் இருக்கைகள் சேதமடைந்து இருந்ததாக புகைப்படங்கள் வெளியாகின. தற்போது உலகக் கோப்பை போட்டிகளுக்காக இந்த மைதானம்  சீரமைக்கப்பட்டுள்ளன.  இன்னும்   மேற்கு பகுதியில் உள்ள இருக்கைகளில் சில மாற்றப்படாமல் தற்காலிக  சுத்தம் மட்டுமே செய்யப்பட்டு உள்ளதாக  கூறப்படுகிறது.  மைதானத்தில் சுற்றி வரும் புறாக்கள்  இருக்கைகளில் எச்சங்களை இட்டு விடுகின்றன. இதனால்  ரசிகர்கள் அதில் அமர முடியாத சூழல் இருந்து வருகிறது. இது தொடர்பாக கிரிக்கெட் வர்ணனையாளர் வெங்கடேஷ் சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்டு இருந்தார்.

உலகக்கோப்பை

இந்த  வீடியோ காட்சிகள் வைரலாகி  வருகிறது. போட்டிகள் தொடங்குவதற்குள்  முழுமையாக சுத்தப்படுத்தி இருக்க வேண்டும்.   சேதமடைந்த இருக்கைகளை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும் என  கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில்  இந்தியா, கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு தகுதியான நாடு என்பதில் சந்தேகம் இருக்க முடியாது எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web