சிகாகோவில் கெத்து காட்டும் முதல்வர் ஸ்டாலின்... ரூ.2,666 கோடி முதலீட்டுக்கு ஜாபில், ராக்வெல் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

 
ராக்வெல்
 

அமெரிக்காவில் தமிழக முதல்வர் தமிழகத்திற்கு முதலீடு ஈர்க்கும் நோக்கில் அரசு முறை பயணமாக சென்றிருக்கும் நிலையில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சிகாகோ மாகாணத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஸ்டாலின்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில், “தமிழக  இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்காகவும், முதல்வர்  மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இப்பயணத்தின் போது, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில்,  உலகின் 14 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ரூ.4350 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழகத்தில்  புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.      

ஸ்டாலின்    

இதைத்தொடர்ந்து, நேற்று  முதல்வர் மு.க. ஸ்டாலின்  சிகாகோவில், ஜாபில் நிறுவனத்துடன் ரூ. 2000 கோடி முதலீட்டில் 5000  பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில்  திருச்சிராப்பள்ளியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைக்கவும், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்துடன் ரூ.666 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்திற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும்,

ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் தமிழக இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை