அனைவருக்கும் ஸ்டார்ட்அப் மையம்... சென்னை ஐஐடியில் புதிய முயற்சி!

 
iit
 

புதுயுகத் தொழில்முனைவு நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு உதவும் நோக்கில், “அனைவருக்கும் ஸ்டார்ட்அப்” என்ற புதிய மையத்தை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. இந்த மையம், புதுமையான யோசனைகளை நடைமுறைப்படுத்த உதவுவதோடு, தொழில்முனைவோருக்கு தேவையான வழிகாட்டல் மற்றும் ஆதரவையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

iit

சென்னை ஐஐடி-இன் புதுயுகத் தொழில்முனைவு ஆராய்ச்சி மையமும் பேரிடர் நிதியுதவிக்கான ஆராய்ச்சி மையமும் இணைந்து இந்த மையத்தைத் தொடங்கியுள்ளன. இதற்கான தொடக்க விழா “தமிழ்நாடு குளோபல் ஸ்டார்ட்அப் மாநாடு” என்ற பெயரில் ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இதைத் தொடங்கி வைத்தார்.

 ஐ.ஐ.டி. மெட்ராஸ்

இந்த மையம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக எண்ம தளத்தில் தற்போது 2.75 லட்சம் புத்தொழில் நிறுவனங்கள், 15 ஆயிரம் முதலீட்டாளர்கள், 5,500 முதலீட்டு நிறுவனங்கள், 1,400 தொழில் ஊக்குவிப்பாளர்கள், 800 வங்கிகள், 110 அரசு திட்டங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. “ஒய்என்ஓஎஸ் ஸும்” என்ற தொழில் ஊக்குவிப்பு நிறுவனமும் இதனுடன் இணைந்துள்ளது. இந்தியா தற்போது புத்தொழில் சூழலில் உலகளவில் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும், பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்த இத்தகைய முயற்சிகள் அவசியம் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!