பாஜகவில் மகளிர் அணி மாநிலத் துணைத் தலைவிக்கு கொலை மிரட்டல்.. .பரபரக்கும் அரசியல் வட்டாரம்... !

 
ஜெயலட்சுமி

பிரபல நடிகையும் பாஜகவில் மகளிர் அணியில் மாநிலத் துணைத் தலைவியுமான  விஜயலட்சுமி  சென்னை அண்ணாநகர் மேற்கு வெல்கம் காலனி பகுதியில் வசித்து வருகிறார். இவர்   தமிழ் சினிமாவில் 'வேட்டைக்காரன்'  உட்பட  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் பல  சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவர்   சென்னை காவல் ஆணையருக்கு நேற்று  ஆன்லைனில் புகார்  அளித்துள்ளார்.

கொலை மிரட்டல்

அந்த புகாரில் நேற்று பிற்பகலில்  70 7 7 26 1 4 6 4 என்ற எண்ணில் இருந்து   தனக்கு ஒரு அழைப்பு வந்தது எனவும்,  எதிர் முனையில் பேசியவர்  தன்னை தரக்குறைவாக பேசி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த எண்ணில் இருந்து பேசியவர் முன்பின் அறிமுகமில்லாதவர். அவர்   தன்னையும் தனது கட்சித் தலைவரையும்  அநாகரீக முறையில் பேசியதால் மிகுந்த  மனஉளைச்சலுக்கு ஆளானேன். அத்துடன் எனக்கு  கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

ஜெயலட்சுமி

நான் கட்சி மற்றும் தனிப்பட்ட வகையில்  ஏழை மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பல சமூக செயல்பாடுகளைச் செய்து வருகிறேன்.  என்னுடைய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மிரட்டல் விடுத்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும் என புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில்  வழக்கு பதிவு செய்து  போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போனில் நடிகைக்கு மிரட்டல் விடுத்த சம்பவம்  திரையுலகம் மற்றும் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web