நள்ளிரவில் பயங்கர கொள்ளை.. கோவில் உண்டியல்களை உடைத்து மொத்தமாக ஆட்டைய போட்ட மர்ம நபர்கள்..!

 
கொடையாஞ்சி கோவில்

திருப்பத்தூர் மாவட்டம்  வாணியம்பாடி அருகே கோவிலில் இருந்த இரண்டு உண்டியல்கள் கொள்ளை போன சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம்  கொடையாஞ்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் வழக்கம் போல் மாலை நடை சாத்தப்பட்டு கோவில் வாசல் பூட்டப்பட்டது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள்  2 உண்டியல்களை திருடி சென்றுள்ளனர். இந்த நிலையில், வழக்கம் போல் பூசாரி கோவிலில் அபிஷேகம் செய்ய சென்ற போது, உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கிராம மக்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்,  சம்பவ இடத்திற்கு  சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கடந்த 2 மாதங்களாக இந்த கோவில் உண்டியல் பணம் எடுக்காமல் உள்ளதால் அதில் சுமார் ரூ 1 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து 2 உண்டியல்களை  திருடி சென்றதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web