ஓட்டுனர், நடத்துனர் மீது கற்களை வீசி தாக்குதல்... இளைஞர்கள் அட்டூழியம்... !!

 
டிரைவர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை  பருத்தியூர் கிராமத்தில் இருந்து 33 ம்  நம்பர் பேருந்து  பயணிகளை ஏற்றிகொண்டு உடுமலைக்கு வந்துகொண்டிருந்தது. அப்போது தேவனூர் புதூர் நிறுத்தத்தில் குடிபோதையில்  3  இளைஞர்கள் ஏறினர். இவர்களிடம்  நடத்துநர் டிக்கட் எடுக்குமாறு அறிவுறுத்தினார்.  அவர்கள் 3 பேரும் எங்களையும்  இலவசமாக அழைத்து செல்லுங்கள் என  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

dச்


நடத்துநருக்கும், இளைஞர்களுக்கும் இடையே தொடர் வாக்குவாதம்  ஏற்பட்ட நிலையில் உடனடியாக பேருந்தை நிறுத்தி அவர்களை இறங்கச் சொன்னார்.  இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருசக்கர வாகனத்தில் பேருந்தை பின் தொடர்ந்து வந்து  செங்கல் மற்றும் கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.  உடனடியாக சுதாரித்த பயணிகள் ஒட்டுஞர், நடத்துநர் இருவரையும் மீட்டு அரசுமருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆம்புலன்ஸ்


 அத்துடன் காவல்துறைக்கும் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் இளைஞர்களை மடக்கி பிடித்தனர். விசாரனையில் அவர்கள் கரட்டூர் பகுதியில் வசித்து வரும் ஆனந்தன்,  கோட்டூர்  மகேந்திரபிரசாத் எனத்  தெரியவந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இவர்களுடன் தொடர்புடைய சக நண்பரான ரஞ்சித்தை தனிப்படை அமைத்து போலீஸ் தேடி வருகின்றனர். 

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

From around the web