வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு... 9 பெட்டிகள் சேதம்... பயணிகள் அச்சம்... !

 
வந்தே பாரத் தாக்குதல்

இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சாதாரண ரயில்களை காட்டிலும் இந்த ரயில்களில் கட்டணங்கள் அதிகம் என்றாலும் அதற்கேற்ற சொகுசு வசதிகளும் உண்டு. அதே நேரத்தில் வந்தே பாரத் ரயில்கள் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்கின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து நெல்லை சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்துள்ளது.

வந்தே பாரத்

அதிநவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதிக புகார்களும் இந்த ரயில் மீது தான் வருகின்றன என்பது தான் நடுத்தர ரயில் பயணிகளின் கருத்தாக உள்ளது.  தமிழகத்தில்  சென்னை – கோவை, சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் மற்றும் சென்னை டூ நெல்லை மற்றும் கோவை – பெங்களூர் என என 4 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வந்தே பாரத்
இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து பிற்பகல்  2.50 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லைக்கு புறப்பட்டு சென்றது. இரவு 10.30 மணியளவில் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள்  வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ரயிலின் 9 பெட்டிகள் சேதமடைந்துள்ளன. ரயிலின் ஜன்னல் கண்ணாடியில் கற்கள் வீசப்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கல் வீசப்பட்ட சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web