அலறிய பயணிகள்... ஓடும் ரயில் மீது உருண்டு விழுந்த கற்கள் .... ஒருவர் படுகாயம்!
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோட்டில் அமைக்கப்பட்ட ரயில் பாதை மலைகளை குடைந்து உருவாக்கப்பட்டது. அதனால் இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில் இந்த இடத்தில் மெதுவாக தான் செல்லும். அந்த ஸ்டேஷனில் ரயில் நின்றாலும் இல்லாவிட்டாலும் மெதுவாக செல்ல ரயில் ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கும். அந்த வகையில் கேரளா திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பிப்ரவரி 9ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6:15க்கு திண்டுக்கல்லை அடுத்த கொடைரோடு-அம்பாத்துறை வழித்தடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ரெயில் பெட்டி மீது பாறை கற்கள் விழுந்தன.
இதில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இயற்கை அழகை ரசித்து பார்த்துக் கொண்டிருந்த கரூர் வினோத்திற்கு முகத்தில் படுயாகம் ஏற்பட்டது. அதிர்ச்சியில் சக பயணிகள் இருக்கைகளை விட்டு எழுந்தனர். பின்னர் அவசர அவசரமாக ஜன்னல் கதவுகளை மூடி விட்டனர். அதேநேரம் ரயிலும் நிறுத்தப்படவில்லை. திண்டுக்கல் ரயில் நிலையத்தை அடைந்ததும் உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கற்கள் பட்டதில் முகத்தில்படுகாயம் அடைந்த வினோத்துக்கும் ரயில்வே டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் ரயில்வே போலீசார் ஆய்வு நடத்தினர். அதில் மர்ம நபர்கள் யாரேனும் மலையில் இருந்து பாறை கற்களை பெயர்த்து எடுத்து ரயில் மீது வீசியிருப்பார்களோ என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறிப்பிட்ட பகுதியிலேயே போலீசார் மறைந்து நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓடும் ரயில் மீது பாறை கற்கள் உருண்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க