பச்சை பால் விற்பனை நிறுத்தம்... ஆவின் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!
தமிழகம் முழுவதும் ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தி, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீபகாலமாக பச்சை நிற பால்பாக்கெட்டை நிறுத்திவிட்டது. புதிய பாலை அறிமுகம் செய்து மறைமுகமாக விலை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து ஆவின் நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பால் விற்பனை நாள் ஒன்றுக்கு சுமார் 14.50 லட்சம் லிட்டரும் மற்றும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பால் உபபொருட்களை சுமார் 1000 க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது..
மேலும் பொதுமக்களுக்கு ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் அனைத்து இடங்களிலும் எளிதில் கிடைக்கும் . அந்த வகையில் ஆவின் நிர்வாகம் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மற்றும் சுற்றுலா தலங்களிலும் ஆவின் விற்பனை நிலையங்களை அமைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் நிர்வாகம் எல்லா காலகட்டங்களிலும் பொதுமக்கள் நலன் மற்றும் அவர்களின் விருப்பத்தை அறிந்து செயல்பட்டு வருகிறது. எனவே மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எவ்வித தங்குதடையுமின்றி விநியோகம் செய்யப்படுகிறது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!