நெல் முளைக்கும் காலத்தில் புயல்... கடல் போல மாறிய வயல்வெளிகள்... விவசாயிகள் வேதனை...!!

 
நெல்

மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டியது. மேலும் ஆந்திரா பகுதியிலும் பலத்த மழைபெய்தது. இதனால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து 16 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

நெல்

பொன்னேரி அடுத்த மீஞ்சூர், இழுப்பாக்கம்,அரசூர், கூடுவாஞ்சேரி, திருப்பாளனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர் முற்றிலுமாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. அதனால் நெல் வயல்கள் முழுவதும் கடல் போல காட்சி அளிக்கிறது. 

மிக்ஜாம் புயல்

இதுகுறித்து மீஞ்சூர் விவசாயி ஜெயம் ரமேஷ் கூறுகையில்,"பூச்சித் தாக்குதலில் இருந்து மீள்வதற்குள்,நெல் முளைக்கும் காலத்தில் புயலினால் நெற்பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. நெல்லை நம்பி தான் வாழ்வாதாரம் இருக்கிறது. நான்கில் மூன்று பங்கு சேதம் ஆகியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். காப்பீடு செய்து இருக்கிறோம். அதிகாரிகளும் அவ்வபோது ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவில் ஆய்வு செய்யும் பணியை முடித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,"என்றார்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web