உஷார்.. 70கிமீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் மழை!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

 
சூறாவளி

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் திடீர் வானிலை மாற்றத்தால் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வீட்டை வெளியே மக்கள் வரவேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  


தலைநகரில் திடீர் வானிலை மாற்றம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து நெருங்கி வரும் மேகங்கள் இவைகளால்  டெல்லியின் பல பகுதிகள்,   நொய்டா, குர்கான் மற்றும் காசியாபாத் பகுதிகளில் இன்று காலையில் 50 முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த சூறைகாற்றுடன் மழை பெய்துள்ளது.இந்த திடீர் கனமழையும், சூறைக்காற்றும் மேலும் நீடிக்கும் , தொடரும்   என்பதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அசானி புயல்

அத்துடன் வெளியில் சென்றாலும்  மரங்களுக்கு அடியில் தங்குவதை தவிர்க்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்றைய தினம் முடிந்த அளவு பயணங்களை தவிர்க்கவும் இந்திய வானிலை ஆய்வும் மைய்ம்  கேட்டுக் கொண்டுள்ளது.அத்துடன் சாம்லி மற்றும் முசாபர்நகர் போன்ற மேற்கு உத்தரப்பிரதேசத்தில் சில பகுதிகளுக்கு  மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web