9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்... !!

 
65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று! துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

தென்கிழக்கு வங்கக்கடலில்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வந்தது.  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுப்பெற வாய்ப்புள்ளது. மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. டிசம்பர் 3 ம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பிருக்கிறது. டிசம்பர் 4ம் தேதி மாலை வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில், சென்னைக்கும் மசிலிப்பட்டினத்திற்கும் இடையே புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

புயல்


இந்நிலையில் தமிழகத்துக்கு  நாளை முதல் டிசம்பர்  5ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.  டிசம்பர்  3 மற்றும் 4ம் தேதிகளில் வட தமிழகத்தின்   கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆரஞ்சு அலர்ட்

இதன் காரணமாக புயல் எச்சரிக்கை எதிரொலியாக  9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.சென்னை, நாகை, காரைக்கால், கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web