தீவிரமடைந்த புயல்... 3 துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

 
புயல் எச்சரிக்கை கூண்டு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. ‘மோந்தா’ எனப் பெயரிடப்பட்ட இந்த புயல் இன்று காலை 5.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது.

65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று! துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

இந்த புயல் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர மாநிலத்தின் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே, நாளை மாலை அல்லது இரவு காக்கிநாடா அருகே தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது மணிக்கு 110 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை கூண்டு

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தற்போது மோந்தா தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதால், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளன. மற்ற துறைமுகங்களில் 2-ம் எண் கூண்டு தொடர்ந்தும் நீடிக்கிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!