கல்லூரி மாணவியை கடித்துக் குதறும் தெருநாய்கள்... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 
மாணவி

தமிழகத்தில் சமீபகாலமாக தெருநாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த மாநில மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் பழனியில்  கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்  ஹேமா.இவர் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

ஹேமா காலையில் கல்லூரிக்கு செல்வதற்காக பழனி தீயணைப்பு நிலையம் அருகே சாலை ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு திரிந்து கொண்டிருந்த தெரு நாய்கள் சூழ்ந்து ஹேமாவை கடித்து குதறிவிட்டன. மாணவி கூச்சலிட்டதை பார்த்த எதிரே இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மாணவியை நாய்களிடம் இருந்து மீட்டனர். நாய்கள் கடித்ததில் கை மற்றும் காலில் ஹேமாவிற்கு காயம்பட்டது. உடனடியாக பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவியை அனுமதித்தனர்.   

ஆம்புலன்ஸ்
கல்லூரிக்கு சென்ற மாணவியை தெருநாய்கள் கடித்த சம்பவம் அருகில்  கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web