உஷார் !! அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயல்!! 5 நாட்களுக்கு எச்சரிக்கை!!

 
அசானி புயல்

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று காலை முதல்  நிலவி வரும்  காற்றழுத்த தாழ்வு மண்டலம், காலை 11:30 மணி அளவில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நேற்று  மாலை 5:30 மணி அளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் "பிபோர்ஜோய் " புயலாக  உருவெடுத்துள்ளது.

புயல்

இதனையடுத்து  இந்த புயல் இன்று வடதிசையில் நகர்ந்து இன்று  காலை 5:30 மணிக்கு அளவில் தீவிர புயலாக வலுப்பெற்று, காலை 08:30 மணி அளவில் கோவாவில் இருந்து மேற்கு – தென்மேற்கே சுமார் 880 கிலோமீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து தென்மேற்கே சுமார் 990 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல்  அடுத்த 12 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.

புயல்

அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து, அதன் பிறகு வடக்கு வடமேற்கு திசையில் அதற்கடுத்த 3 நாட்களில் நகரக்கூடும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் அடுத்த  4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!