அதிர்ச்சி... கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
நர்சிங் கல்லூரி மாணவி 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் அதுல்யா(19). இவர் கடந்த மாதம் பெங்களூரு உத்தர் தாலுகா சிக்கபனாவரத்தில் உள்ள வித்யோதயா நர்சிங் கல்லூரியில் சேர்ந்தார். கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், செல்போனில் தனது தாயாருடன் பேசி அவர், தான் தனிமையாக இருப்பதாக கூறிக்கொண்டே கல்லூரியின் 6வது மாடியில் ஏறிய அதுல்யா, செல்போனில் பேசிக்கொண்டே திடீரென கீழே குதித்தார். இதைப் பார்த்த மற்ற மாணவிகளும், பேராசிரியர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த அதுல்யா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அதுல்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சோலதேவஹள்ளி காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
